அப்துல்கலாமின் 104 வயது அண்ணன் காலமானார்

சாயல்குடி: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் (104). இவர் ராமேஸ்வரத்திலுள்ள மசூதி தெருவில் வசித்து வந்தார். இவரது மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள், 2 மகன்கள். இவர்களில் தற்போது நசீமா மரைக்காயர், நெஹ்ராஜ் பேகம் ஆகிய இரு மகள்களும், ஜெய்னுலாபுதீன் என்ற மகனும் உள்ளனர். 104 வயதான முத்து மீரான் மரைக்காயர் உடல்நல குறைவு, வயது முதிர்வின் காரணமாக நேற்று இரவு மரணமடைந்தார்.  அவரது மறைவுக்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>