பாசிசம் வெற்றி பெற்றால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது: கோவையில் டி.ராஜா பேச்சு

கோவை:  கோவை மாநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கம் மற்றும் பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. சிலையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா திறந்து வைத்தார். எஸ்.கண்ணன் நினைவரங்கத்தை, மாநில செயலாளர் முத்தரசன் திறந்துவைத்தார். பின்னர், நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.ராஜா பேசியதாவது: மதச்சார்பற்ற இந்தியாவை காப்பாற்ற வேண்டிய கடமை நம் முன்னால் இருக்கிறது. பாஜ கட்சி பாசிச கொள்கைகளை கடைபிடித்து வருகிறது.

பாசிசம் வெற்றி பெற்றால் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாது. தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேசி வருகிறார். ஒரே நாடு, ஒரே கலாசாரம் என்ற கொள்கை உடையவர்கள் மாநிலத்துக்கு மாநிலம் அந்த மாநில மக்களுடைய கலாச்சாரத்தை முன்வைத்து ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

Related Stories: