நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்n 50% பெண் வேட்பாளர்கள் அறிவிப்பு: திருவொற்றியூரில் சீமான் போட்டி

சென்னை: 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர்கட்சி தனித்து போட்டியிடுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் நேற்று சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் சீமான் முன்னிலையில் அணிவகுத்து நின்றனர். மேலும் இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதையடுத்து சீமான் பேசுகையில்: விவசாயி வாழ்ந்தால் நாடு வாழும், விவசாயி செத்தால் அது நாடல்ல சுடுகாடு, 60 வயதுக்குமேல் விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கந்து வட்டி செய்யும் வேலையை அரசு செய்கிறது. ஆடுமாடு வளர்ப்பது அவமானமல்ல, அது வருமானம், ெவகுமானம். உயிரை கொடுத்து விவசாயிகளை வாழவைப்போம் என்றார்.

மேலும் திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிருக்கிறார். அதைப்போன்று கும்மிடிப்பூண்டி தொகுதியில் உஷா, பொன்னேரி மகேஸ்வரி, திருத்தணி அகிலா, பூந்தமல்லி மணிமேகலை, ஆவடி விஜயலட்சுமி, ெபரம்பூர் மெர்லின் சுகந்தி, கொளத்தூர் கெமிலஸ் செல்வா, வில்லிவாக்கதர், துறைமுகம் முகமது கடாபி,சேப்பாக்கம் ஜெயசிம்மராஜா, அண்ணாநகர் வக்கீல் சங்கர்,விருகம்பாக்கம் ராஜேந்திரன், அம்பத்தூர் கணேஷ்குமார், சைதாப்பேட்டை சுரேஷ்குமார், சோழிங்கநல்லூர் மைக்கேல், ஆலந்தூர் கார்த்திகேயன், பெரும்புதூர் புஷ்பராஜ், தாம்பரம் சுரேஷ்குமார், செங்கல்பட்டு சஞ்சீவிநாதன், செய்யூர் ராஜேஷ், காஞ்சிபுரம் சால்டின் என 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

Related Stories: