பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதை பொருள் கடத்திய படகுகள்: 200 கிலோ ஹெராயின் கடலில் வீசினர்

திருவனந்தபுரம்: கேரள கடல் எல்லையில் நேற்று அதிகாலை  விழிஞ்சம் கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 3 படகுகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டு இருந்தது. அந்த படகுகளை சோதனை செய்த போது, அதில் ஹெராயின்,ஹாபிஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த படகுகள் இலங்கையை சேர்ந்தவை என்பதும், போதை பொருட்களை பாகிஸ்தானில் இருந்து கடத்தி வருவதும் தெரிய வந்தது. 3 படகுகளில் 19 பேர் இருந்தனர். இதற்கிடையே படகில் இருந்த 200 கிலோ ஹெராயின், 60 கிலோ ஹாபிஸ் பாக்கெட்டுகளை அவர்கள் கடலில் வீசினர். தொடர்ந்து 3 படகுகளையும் கடலோர பாதுகாப்பு படையினர் விழிஞ்சம் துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர்.

Related Stories: