சில்லி பாயின்ட்...

* சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் 21-12, 21-5 என்ற நேர் செட்களில் இந்தியாவின் பி.வி.சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

* ‘முழு உடல்தகுதியுடன் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் களமிறங்கத் தயாராக உள்ளேன். ஓய்வு பெறுவது பற்றி இதுவரை நினைத்து கூட பார்த்ததில்லை’ என்று சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் கூறியுள்ளார்.

* தென் ஆப்ரிக்கா மகளிர் கிரிக்கெட் அணியுடன் லக்னோவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன் (மித்தாலி 50, ஹர்மான்பிரீத் 40, தீப்தி 27); தென் ஆப்ரிக்கா 40.1 ஓவரில் 178/2 (லிஸெல் லீ 83*, லாரா வுல்வார்ட் 80).

* ரோமில் நேற்று நடந்த மகளிர் 65 கி. எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் கனடாவின் டயானா மேரி ஹெலனை 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதுடன் தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றினார்.

Related Stories:

>