புதுவை, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து மற்ற மாநிலத்தவருக்கு இ-பாஸ் கட்டாயம்

சென்னை: அண்டை மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ- பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி அறிகுறி உள்ள அனைவருக்கும் சோதனை நடத்த வேண்டும், நோய் கட்டுப்பாட்டு பகுதி முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ- பாஸ் கட்டயாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதைத்தவிர்த்து புதுவை, ஆந்திரா, கர்நாடகா தவிர்த்து மற்ற  அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும் இ- பாஸ் கட்டயாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அனைவரும் விமான நிலையத்தில் கட்டாயம் கொரோனா சோதனைக்கு மாதிரியை அளிக்க வேண்டும்.

Related Stories:

>