×

கத்தார் ஓபன் டென்னிஸ் குவித்தோவா சாம்பியன்

தோஹா: கத்தார் டோட்டல் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசாவுடன் (16வது ரேங்க், 27 வயது) நேற்று மோதிய குவித்தோவா (10வது ரேங்க், 30 வயது) 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 6 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. 2018ல் நடந்த இத்தொடரின் பைனலிலும் குவித்தோவா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அந்த போட்டி 2 மணி, 16 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. குவித்தோவா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற 28வது சாம்பியன் பட்டம் இது.


Tags : Qatar Open , Qatar Open tennis champion
× RELATED கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரோஜர் பெடரர் தோல்வி