பீமா கோரேகாவ் கலவர வழக்கில் கைதானவர் மருத்துவமனையில் இருந்து வரவர ராவ் டிஸ்சார்ஜ்: ஜாமீன் தொகை கட்டியதும் விடுதலை

மும்பை: கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி புனே அருகில் உள்ள பீமா கோரேகாவில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த கலவரத்துக்கு முதல்நாள் புனேயில் நடந்த எல்கார் பரிஷத் மாநாட்டில் ஆக்ரோஷமாக பேசியவர்களே காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த மாநாட்டை மாவோயிஸ்டுக்கள்தான் ஏற்பாடு செய்ததாக கூறும் போலீசார், இடது சாரி கொள்கை உடைய தெலுங்கு கவிஞர் வரவர ரா உட்பட பலரை கைது செய்தனர். 82 வயதான வரவரராவ், நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருடைய உடல் நலக்குறைவை கருத்தில் கொண்டு அவருக்கு மும்பை ஐகோர்ட் 6 மாத ஜாமீன் வழங்கி கடந்த மாதம் 22ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, நானாவதி மருத்துவமனையில் வரவர ராவ் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், வரவர ராவ் தனது ஜாமீன் தொகையை செலுத்தி உள்ளார். அதே தொகைக்கு மேலும் 2 பேரின் உத்தரவாதத்தை அளிப்பதற்கு ஏப்ரல் 5ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், வரவர ராவ் நேற்று நானாவதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 2 பேர் ஜாமீன் தொகை செலுத்தியதும் அவர் விடுதலை செய்யப்படுவார்.

Related Stories: