எல்லைகளை கண்காணிக்க தனி செயற்கைக்கோள்

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ, புவி ஆராய்ச்சி, வானிலை, தகவல் தொடர்பு உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வரிசையில், அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஜியோ இமேஜிங் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஜிசாட்-1 எனும் அந்த செயற்கைகோள் கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அத்திட்டம் கைவிடப்பட்டது. இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஜிசாட்-1 செயற்கைகோள் இம்மாத இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் விண்ணில் ஏவப்படும்’’ என்றார்.

ஜிசாட்-1 செயற்கைகோள் பூமியின் மட்டத்திலிருந்து 36,000 கிமீ உயரத்தில் நிலை நிறுத்தப்படும். இது பூமியின் சுற்றுப்பாதையில் சுழலும். இதில், பூமியைப் படம்பிடிப்பதற்காக சக்திவாய்ந்த கேமிரா இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும், கடற்பரப்பையும் சேர்த்துக் கண்காணிக்கமுடியும். எனவே, இது பெரும்பான்மை நேரங்களில் உளவு செயற்கைக் செயல்படும். இந்திய எல்லையைக் கடக்கும் மக்கள் மற்றும் மிருகங்களைக் கூட இந்த செயற்கைக் கோளால் கண்காணிக்கமுடியும். இது மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பு செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: