காஞ்சிபுரம் மாவட்ட சட்டமன்ற தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்க போகும் இளைஞர்கள்

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021ம் ஆண்டுக்கான  இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜன.20ம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,60,853 ஆண் வாக்காளர்கள், 6,95,909 பெண் வாக்காளர்கள், 190 திருநங்கைகள் என மொத்தம் 13,56,952 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஏறக்குறைய 4ல் 1 சதவீதம் 30-39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 13,56,952 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்த வாக்காளர்களில், வயது வாரியான பிரிவில், 30 முதல் 39 வயது வரையிலான வாக்காளர்களே அதிகம் உள்ளனர். இந்த வயதில், 3,21,660 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல், 40 முதல் 49 வயது வரையிலான வாக்காளர்களில் 2,92,976 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயதில் 25,835 பேர் உள்ளனர். 20-29 வயத்துக்கு உட்பட்ட 2,49,799 வாக்காளர்களும், 50-59 வயத்துக்கு உட்பட்ட 2,01,303 வாக்காளர்களும், 60 வயத்துக்கு மேற்பட்டோரில் சுமார் 2 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிப்பது இளைஞர்கள் வசம் உள்ளது.

Related Stories: