3 பேர் இருந்தால் கட்டுப்பாட்டு பகுதியாக மாறும் அபாயம் கொரோனா தொற்று சிக்கலில் சென்னை : சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

சென்னை: சென்னையில் திடீரென கொரோனா தொற்று நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது. இதன்படி 1,373 தெருக்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருந்தால், அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதிய வழிகாட்டு ெநறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக நோய்தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.

கடந்த வாரங்களில் சென்னையில் தினசரி 150 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை 243 ஆக உயர்ந்துள்ளது. ஒரு ெதருவில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  இதற்கு, முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதது என்பது முக்கியமானது என்றாலும், பாதுகாப்பு வழிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுதான் முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதுதான். சென்னையில் பலர் முகக்கவசம் அணிவது இல்லை. திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சென்னை மாநகராட்சியில் உள்ள பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விதிமீறலில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் ஓட்டல்கள், நிறுவன உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை  வேண்டிய அதிகாரிகள் தேர்தல் பணியில் உள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சியில் பாதிப்பு எவ்வளவு?

சென்னையில் இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 728 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 30  ஆயிரத்து 708 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1857 பேர் சிகிச்சை  பெற்று வருகின்றனர். 4163 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>