ராஷ்டிரிய லோக் சமதா கட்சியிலிருந்து 41 மூத்த தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா: ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

பாட்னா: ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் 41 மூத்த தலைவர்கள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக ஆட்சி நடைபெற்று வரும்நிலையில், அம்மாநிலத்தின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவர் கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதாக கடந்த சில நாட்களாக ெசய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் மூத்த தலைவர் வினய் குஷ்வாஹா தலைமையிலான 41 மூத்த தலைவர்கள் கூட்டாக தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து வினய் குஷ்வாஹா கூறுகையில், ‘ஆளும் நிதிஷ் அரசுக்கு எதிராக எங்கள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், உபேந்திர குஷ்வாஹா குஷ்வா சமூகத்திற்கு எதிராக செயல்படுகிறார். அவரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 41 முக்கிய தலைவர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தொண்டர்கள் 90 சதவீதம் பேர் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்தில் எந்தக் கட்சியுடன் சேர்வது என்பது குறித்து இப்போது கூறமுடியாது’ என்றார்.

இதுகுறித்து கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா கூறுகையில், ‘ஐக்கிய ஜனதா தளத்துடன் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை இணைப்பது என்ற தகவல் அடிப்படை ஆதாரமற்றது’ என்றார்.

Related Stories: