×

2 வது இன்னிங்ஸை தொடங்கும் கொரோனா...! தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம்: தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடக மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் இ - பாஸ் கட்டாயம் எனவும் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அதனை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.


Tags : Corona ,TN , Corona to start 2nd inning ...! E-pass mandatory for all coming to Tamil Nadu: Government of Tamil Nadu announcement
× RELATED கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக,...