×

வளிமண்டல சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காராணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல்-வடதமிழகம் வரை வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இது குறித்த செய்திக் குறிப்பில், குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் 9-ந் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TN ,Meteorological Center , Chance of rain for 5 days in Tamil Nadu due to atmospheric circulation ..! Meteorological Center Information
× RELATED மார்ச் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை...