கொரோனா பரவல் மீண்டும் உச்சம்; ஒரே நாளில் நாடு முழுவதும் 18,711 பேருக்கு தொற்று உறுதி: மக்கள் அச்சம்..!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தாக்கம்  மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,12,10,799-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,756-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24  மணி நேரத்தில் 14,392 கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,08,68,520-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களின் நாடு முழுவதும் தற்போது 1,84,523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2 கொடியே 9 லட்சத்து 22,344 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

Related Stories:

>