பெற்றோரை பிரிய மனமின்றி அழுத மணப்பெண் பலி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், சோனேபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் குப்தேஸ்வரி. அவருக்கு சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் கணவருடன் செல்லும் முன்பாக, பெற்றோரை விட்டுப் பிரிய மனமின்றி குப்தேஸ்வரி தேம்பித் தேம்பி அழுதார். அவரை தேற்ற முடியாமல் பெற்றோரும் சேர்ந்து அழுதனர். தாங்க முடியாத அளவுக்கு குப்தேஸ்வரி தேம்பி அழுததால், அவருக்கு அங்கேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பெற்றோரும், உறவினர்களும் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியதும், இரு வீட்டினரும் சோகத்தில் கதறி அழுதனர். திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மணப்பெண் இறந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories:

>