பாஜ.வின் சர்ச்சை எம்பி. விமான ஆம்புலன்சில் பறந்தார் பிரக்யா சிங்: மூச்சு திணறலால் பாதிப்பு

போபால்: பாஜ.வின் சர்ச்சைக்குரிய எம்பி.க்களில் ஒருவரான பிரக்யா சிங் தாகூர், மூச்சு திணறல் காரணமாக விமான ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மும்பை கொண்டு செல்லப்பட்டார். இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு டிசம்பரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு, கடந்த மாதம் 19ம் தேதி, மீண்டும் டெல்லி எய்ம்சில் சேர்க்கப்பட்டு சிகிசசை பெற்றார். இந்நிலையில், போபாலில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனால், விமான ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அவசரமாக மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories:

>