கொரோனா அதிகரிக்கும் 8 மாநிலங்களில் வேகமாக தடுப்பூசி போட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் அதிகரிக்கும் 8 மாநிலங்களில் பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடுதலை விரைவுபடுத்த வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தினசரி பாதிப்புகள் அதிகரிக்கும் 8 மாநிலங்களின் கள நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று ஆலோசனை மேற்கொண்டது. மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் அரியானா, ஆந்திரா, ஒடிசா, கோவா, இமாச்சங், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் மேலாண் இயக்குநர்களுடன் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் பின்பற்றப்பட்ட பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை என்ற சிறந்த வியூகத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் நோற் தொற்று அண்டை மாநிலங்களுக்கும் பரவாமல் தடுக்க முடியும் என கூறப்பட்டது. மேலும், அதிக பாதிப்புள்ள மாவட்டங்களில் தகுதி வாய்ந்தோருக்கு விரைவாக தடுப்பூசிகளை செலுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Stories:

>