கூட்டணியில் பிரச்னை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், ராயபுரம் தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று தொடங்கினார். முதற்கட்டமாக, ராயபுரம் தேர்தல் பணிமனை அமைய உள்ள இடத்தில் ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் ராயபுரம் தொகுதி கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என அனைவரையும் சந்தித்து ஆலோசனை செய்தார்.   

 பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில், எந்த குளறுபடியும் இல்லை. பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இல்லாமல் அறிவித்திருப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஒரே நோக்கத்துடனே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டணி முழு உருவம் பெறும்போது கூட்டணி பலம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>