அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு எத்தனை இடம்

சென்னை: தமாகா சார்பில், உலக மகளிர் தின விழா விழா சென்னை அடையாறு ராஜரத்தினம் அரங்கில் நேற்று நடந்தது. மகளிரணி தலைவி ராணி கிருஷ்ணன் தலைமை வகித்தார். விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 14 பெண்களுக்கு சாதனையாளர் விருதுகளை ஜி.கே.வாசன் வழங்கி கவுரவித்தார். விழாவில், மாநில துணை தலைவர் கோவை தங்கம், விடியல் சேகர், என்.டி.எஸ்.சார்லஸ், தி.நகர் கோதண்டன், அனுராதா அபி, கல்யாணி, நந்தினி, மாவட்ட தலைவர்கள் பிஜு சாக்கோ, சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘மற்ற கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக முடிக்கவில்லை. அக்குழுவுடன் தமாகா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. ஒத்த கருத்து ஏற்பட்டு சுமுகமாக உடன்பாடு விரைவில் எட்டப்படும். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி படிப்படியாக ஆலோசனை நடத்தி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>