×

பாஜ எம்எல்ஏ பிறந்தநாள் விழாவில் மோதல் ஒருவர் சுட்டுக் கொலை ஒருவர் அடித்து கொலை

தமோ: மத்தியப் பிரதேச மாநிலம், ஜபேரா சட்டப்பேரவை தொகுதி பாஜ எம்எல்ஏ தர்மேந்திர சிங் லோதி. இவரது தனது பிறந்தநாளை கடந்த வெள்ளியன்று இரவு கொண்டாடினார். இதில், திடீரென மோதல் வெடித்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘தமோ மாவட்டத்தில் உள்ள பன்வார் கிராமத்தில் இந்த பிறந்தநாள் விழா நடந்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஜோகேந்திர சிங், துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். அர்விந்த் ஜெயின் என்பவர் கற்கள், கட்டைகளால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். இதில் ஈடுபட்டவர்களை  அடையாளம் காண முயன்று வருகிறோம். விசாரணை தொடர்கிறது,’’ என்றார். மோதல் நடந்தபோது எம்எல்ஏ தர்மேந்திர சிங் அங்கு இல்லை என கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்துக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை வரவேற்க சென்று விட்டதாக பாஜ.வினர் கூறியுள்ளனர்.


Tags : BJP ,MLA , BJP MLA shot dead in clash at birthday party
× RELATED காங்கிரஸ் கட்சியினருக்கு எதிர்ப்பு...