×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு!: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தீர்த்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது. பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலும் மாம்பழம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.


Tags : Patent People's Party , Tamil Nadu Legislative Assembly election, pamaka, mango symbol
× RELATED சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம்...