×

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல: டி.ராஜா பேட்டி

திருச்சி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மதவெறியை முன்வைத்து அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்த வேண்டும். மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநில தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர். பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அதிமுக மற்றும் இதர கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள் எனவும் கூறினார். திமுக கூட்டணியில் இடம்பெறுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில்6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP ,D. Raja , Prolonging BJP rule is not good for the country: D. Raja interview
× RELATED பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை...