×

கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பியாச்சு; சாலைப் பணி எப்போ: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

கம்பம்: கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பிய நிலையில், சாலை பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன; ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 8வது வார்டு செக்கடி தெருவில் கடந்த மாதம் திடீரென புதிய தார்ச்சாலை அமைக்க பணிகள் நடந்தன. இதையொட்டி சுமார் 15 நாட்களுக்கு முன் ஜல்லிகற்களை பரப்பினர். அதன்பின் சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதுவரை பணி தொடங்கப்படவில்லை.

இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். வயதானவர்கள் கால்களில் ஜல்லிக்கற்கள் இடறி கீழே விழுகின்றனர். எனவே, சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘புதிய தார்ச்சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டி 15 நாட்களாகியும் இன்னும் பணியை தொடங்காமல் உள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு அவதிப்படுகிறோம். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விரைவில் சாலைப்பணியை முடிக்க முடிக்க வேண்டும்‘ என்றனர்.



Tags : Pole 8th Ward , கம்பம் 8வது வார்டில் ஜல்லி பரப்பியாச்சு; சாலைப் பணி எப்போ: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி
× RELATED தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில்...