குன்னூரில் தேர்தல் விதிமுறை மீறி அதிமுகவினர் போஸ்டர்: அதிகாரிகள் அலட்சியம்

குன்னூர்: குன்னூர் வெலிங்டன் பகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறி அதிமுகவினர் போஸ்டர்கள் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய  மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குச்சாவடி அமைக்கும் பணிகளில் தேர்தல் ஆணையம்  மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவ படையினர் 90 பேர்  வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகள் மட்டுமின்றி பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையிலும் ஈடுபட உள்ளனர்.  

 தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினரின் கட்அவுட் மற்றும் பேனர்கள் அகற்றபட்டுள்ளது. அரசியல்வாதிகள் வாகனங்களில் கட்சி கொடிகள் மற்றும்  பெயர்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.  இந்த விதிமுறைகளை மீறி அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். குன்னூர் அருகே உள்ள  வெலிங்டன்  காவல்நிலையம் அருகே  அதிமுகவினர் போஸ்டர் அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து  குறித்து  காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: