×

கலெக்டர் ஆபீஸ் சாலையோரம் அலங்கார தெரு விளக்கு அமைப்பு

ஊட்டி: ஊட்டி கலெக்டர் அலுவலகம் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகள்  மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார விளக்குகள்  அமைக்கப்பட்டன. எனினும் இவைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. எனினும்,  சேரிங்கிராஸ் பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்குகள் மட்டும் முறையாக எரிந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முதல் சேரிங்கிராஸ் வரை சாலையோரத்தில் புதிதாக நடைபாதை அமைக்கப்பட்டது.  இப்பணிகள் நடந்து வந்த நிலையில் சாலை ஓரங்களில் இருந்த அனைத்து அலங்கார தெரு விளக்குகளும் அகற்றப்பட்டன. நடைபாதை  அமைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த நடைபாதை ஓரங்களில் அலங்கார தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளை ஊட்டி நகராட்சி  நிர்வாகம் துவக்கி உள்ளது. கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை மட்டுமின்றி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள தெரு விளக்குகளை  சீரமைத்து எரிய செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : கலெக்டர் ஆபீஸ் சாலையோரம் அலங்கார தெரு விளக்கு அமைப்பு
× RELATED தமிழகம் மாளிகை பூங்காவில் புதிர் விளையாட்டு தளம் அமைப்பு