×

இலை, பூ, கனி வரிசையில் சேருமா முரசு?: தொகுதி பங்கீடு குறித்து அதிமுக-தேமுதிக இடையே மாலை மீண்டும் பேச்சுவார்த்தை.!!!

சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று ஓ.பி.எஸ். தகவல் தெரிவித்துள்ளார். தேமுதிக - அதிமுக இடையே இதுவரை 3 முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளது. பாமகவுக்கு நிகரான தகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தி வந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

வன்னியர் உள்ஒதுக்கீட்டை காரணமாக வைத்து பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, முதலில் சுமூகமாக உடன்பாட்டை முடித்தது. இதைத் தொடர்ந்து, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டில் கறார் காட்டி வந்தது. இதனிடையே, நேற்று 20 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான இடத்தையும் கொடுத்து பாஜகவை அதிமுக சரிகட்டியது. ஆனால், தேமுதிக தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.

மொத்தம் 25 தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், ஆனால் அதிமுக இதனை ஏற்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களை இடத்தையும் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது. இதனை தேமுதிகவும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தேமுதிகவுடன் இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக சிக்கல் நீடித்து வரும் நிலையில், இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Tags : Murasu , Continuing tug-of-war over AIADMK-Temujin block allocation: Negotiations resume at 5pm today: OPS interview
× RELATED சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தேமுதிக...