×

சட்டமன்ற தேர்தலில் இணைந்து களமிறங்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் இணைந்து களமிறங்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. மநீம தலைமையிலான மூன்றாவது அணியில் சமக, ஐஜேக கட்சிகள் உள்ள நிலையில், காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என கட்சியின் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். காங்கிரசுடன் வெவ்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சி.கே.குமரவேல் குறிப்பிட்டுள்ளார்.

Tags : People's Justice Center ,Congress party ,Assembly elections , Assembly Election, Congress, People's Justice Center, Call
× RELATED இந்து கடவுள்கள் போல் வேடமிட்டு...