×

மார்ச் 8 முதல் 10ம் தேதி வரை தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மார்ச் 7ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 8 முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Meteorological Survey Center , Moderate to thundershowers at one or two places in the southern districts from March 8 to 10: Meteorological Department.
× RELATED வாக்காளர் பட்டியலில் 2 இடத்தில் பெயர்...