×

என்.ஆர்.காங்.,: பாஜக கூட்டணி உடைந்ததா?: 24 மணி நேர கெடு முடிந்தது; கூட்டணி குறித்து ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும்...சாமிநாதன் பேட்டி.!!!

புதுச்சேரி: கூட்டணி குறித்து என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையில் மதச்சார்பற்ற அணிகள் ஓரணியாக சட்டமன்ற தேர்தலை களம் காண தயாராகி வருகின்றன. அதேவேளையில் தேஜ கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, அதிமுக அணிகள் ஓரணியாக நிற்க முடிவு செய்துள்ளன. இந்த அணியில் இடம்பெற்றிருந்த ரங்கசாமி முதல்வர் வேட்பாளர் பிரச்னை காரணமாக தற்போது விலகும் முடிவை கையில் எடுத்துள்ள நிலையில், அவரது நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் அணிக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டுமென திமுக முன்னாள் அமைச்சரும், காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் அழைப்பு விடுத்து ஒரு காணொலி  பதிவை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, நேற்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

இருப்பினும், என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலுக்கு பின் ஆட்சியமைக்கும்போது அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதனால், புதுச்சேரி அரசியலில் பரப்பு நீடித்து வருகிறது. தற்போது அனைத்து கட்சிகளின் பார்வையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில், சன்நியூஸ் சேனலுக்கு பேட்டியளித்த புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், கூட்டணி அமைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்; அது குறித்த அறிவிப்பை என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தான் அறிவிக்க வேண்டும். தனது தேவை தொடர்பாக இதுவரை சரியான பதிலை ரங்கசாமி தெரிவிக்கவில்லை. கூட்டணிக்கு ரங்கசாமி வராவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மேலிடம் முடிவு செய்யும். 24 மணி நேர கெடு முடிந்த நிலையில் எங்களது முயற்சி முடிந்தது. கூட்டணியில் ரங்கசாமி இருப்பது தொடர்பாக 24 தணி நேரத்துக்குள் தெரியபடுத்தப்படும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : R. Kang ,Pajaka ,Rangasami ,Saminathan , NRC, - BJP alliance broken ?: 24-hour deadline over; Rangasamy should announce about the alliance ... Saminathan interview. !!!
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில்...