சி.எம்.மாவட்டத்தில் இலையுடன் மல்லுகட்டும் குக்கர்

பாஜகவுடன் சேர்ந்து அதிமுக கூட்டணியில் புகுந்துவிடலாம் என்ற அமமுகவினர் போட்ட திட்டம் தவிடு பொடியானதால், அதிர்ச்சியில் இருக்காராம் டிடிவி. ஆனாலும் தேர்தல் களத்தில் அதிமுகவை விட நாங்களும் சளைத்தவர்கள் அல்ல’ என்று சிஎம் மாவட்டத்து குக்கர் கட்சி நிர்வாகிகள் நிரூபிச்சிட்டாங்களாம். சேலம் தெற்கு, சேலம் மேற்கு, சேலம் வடக்கு என 3 தொகுதி மத்திய மாவட்டத்துக்குள்ளே வருது. இங்க மட்டும் தொகுதிக்கு தலா 15 பேர் வீதம், மொத்தம் 45 பேர் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்து, டிடிவியை மகிழ்ச்சியில் திளைக்க வச்சிருக்காங்களாம். ‘பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வந்த சின்ன மம்மியை சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு கொடுத்து அழைத்து சென்றோம். சின்ன மம்மியை டிடிவி தாங்கி பிடித்தார். அதிமுக ஆட்சியை அமைத்து கொடுத்தவர் சின்ன மம்மி.

அவ்வாறு சீரமைத்து கொடுத்துவிட்டு, சிறைக்கு சென்ற அவரை இ.பி.எஸ்., உதாசீனப்படுத்தி விட்டார். இதனால் சின்ன மம்மி மனமுடைந்து அரசியலில் இருந்து விலகியுள்ளார். அவர் விலகியதால் அமமுகவின் ஓட்டு எங்கும் போகவில்லை. எங்களிடமே இருக்கிறது. கடந்த பார்லிமென்ட் எலெக்ஷனில் ஸ்டேட் பூராவும், 25 லட்சம் ஓட்டு வாங்கினோம். எங்களது கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து ெஜயிப்போம். ஆட்சியில் இருந்து கொள்ளையடிக்கும் கூட்டத்தை விரட்டி கட்சியை கைப்பற்றுவோம்,’’ இப்படி மூச்சிறைக்க பேசியுள்ளார் மாங்கனி மத்திய மாவட்ட அமமுக செயலாளரான மாஜி எம்எல்ஏ வெங்கடாசலம்.

Related Stories: