×

சிறப்பு டிஜிபி, செங்கை எஸ்.பி.யை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: தமிழக டிஜிபிக்கு பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை:  தமிழக டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  பெண் ஐபிஎஸ் அதிகாரியை தமிழக சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, விஷாகா விசாரணைக் குழு ஒன்றும் சிபிசிஐடியும் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புகார் கொடுத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக வெளிவரும் தகவல் காவல்துறையின் மீதான நம்பிக்கையை முற்றிலும் சிதைக்கிறது.

புகார் கொடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ராஜேஷ் தாசையும் அவருக்கு துணை போன செங்கல்பட்டு எஸ்பி கண்ணனையும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 54 பேர் மீது காவல்துறையினர் பதிவு செய்த வழக்ைக ரத்து செய்ய வேண்டும்.  இந்த வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து  முடிக்க வேண்டும்.Tags : DGP ,Senkai ,SB ,Balakrishnan ,Tamil Nadu , Special DGP, Senkai SB should be sacked: Balakrishnan's letter to Tamil Nadu DGP
× RELATED லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள...