அரிசி வடை

எப்படி செய்வது

அரிசி, துவரம்பருப்பை கழுவி தண்ணீர் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் தண்ணீரை வடித்து இத்துடன் தனியா, உப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிரைண்டரில் அரைக்கவும். ரவை பதத்துக்கு அரைபட்டதும் நறுக்கிய சாம்பார் வெங்காயம் போட்டு 2 சுற்று சுற்றி வடை பதத்துக்கு அரைக்கவும் (மாவு கெட்டியாக, மென்மையாக இருக்கக்கூடாது). பின் நறுக்கிய கொத்தமல்லியை இத்துடன் சேர்த்து கலக்கவும். மாவை வடைகளாக தட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். சுவையான அரிசி வடை ரெடி.

× RELATED தெலங்கானா மாநிலத்திலிருந்து 2613 டன் அரிசி விழுப்புரம் வருகை