×

பாலியல் தொல்லை விவகாரம்: விசாகா கமிட்டி ஐஜி மாற்றம்

சென்னை:  முதல்வர் சுற்றுப் பயணத்தின்போது பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம், சிறப்பு டிஜிபி ஒருவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இது குறித்து விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் பெண் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில் ஐஜி அருண் சம்பவம் நடப்பதற்கு முன்னரே மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனால் அவருக்குப் பதில் ஐஜி நிர்மல்குமார் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.  இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Tags : Visa Committee ,IG , Sexual Harassment Issue: Visa Committee IG Change
× RELATED வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி 6...