பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு 5 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலை

சென்னை: சட்டசபை தேர்தலையொட்டி பாமக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. இதில், 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பாமக சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று தி.நகரில் நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணி வீடியோ கான்பிரன்சில் கலந்துெகாண்டனர். பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் தேர்தல் அறிக்கைைய வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும். இடைநிற்றலை தடுக்கும் வகையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 500 வீதமும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 1000 வீதமும் நிதியுதவி அளிக்கப்படும்.

* நீட் நுழைவு தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு.

* மருத்துவக் கல்லூரிகள் இல்லாத காஞ்சிபுரம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்.

* அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க சிறப்புத் திட்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

Related Stories: