×

கம்ப்யூட்டரிலும் வீடியோ கால்: வாட்ஸ் அப்பில் புதிய வசதி

கலிபோர்னியா: வாட்ஸ் அப்பின் வீடியோ காலிங் வசதி தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப்புக்கும் விரிவுபடுத்தப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. நட்பு, காதல், தொழில்ரீதியான உரையாடல்கள் என அனைத்துக்கும் பயன்படுவதால் வாட்ஸ் அப்பின் வீடியோ கால் வசதி மிகவும் பிரபலமானதாகவும், பலராலும் விரும்பப்படும் அம்சமாகவும் உள்ளது. கொரோனா ஊரடங்கினால் தற்போது நடந்து வரும் ஆன்லைன் வகுப்புகளுக்கும் வாட்ஸ் அப் வீடியோ காலிங் பெரிதும் பயன் தந்து வருகிறது.

டிஜிட்டல் யுகத்தில் தவிர்க்க முடியாததாகி விட்ட இந்த வீடியோ கால் வசதியினை இனி கம்ப்யூட்டர், லேப்டாப்பிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக். செல்போனை போலவே ‘வாட்ஸ் அப் டெஸ்க்டாப்’ என்ற செயலியை இதற்காக கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்டோஸ், ஆப்பிள் என இருவகை கம்ப்யூட்டர், லேப்டாப்பிலும் இந்த புதிய வசதியைப் பயன்படுத்தலாம். இணையதள, கேமரா வசதி அவசியம். சிறப்பான ஆடியோ வசதிக்காக ஹெட்போன் பயன்படுத்தவும் என வாட்ஸ்அப் ஆலோசனை கூறியுள்ளது.

Tags : Video Call on Computer: New feature in WhatsApp
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!