விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு மியான்மர் ராணுவத்தின் 5 யூடியூப் சேனல் முடக்கம்: வீடியோக்களும் அதிரடி நீக்கம்

பாங்காங்: மியான்மரில் கடந்த மாதம் 2ம் தேதி ராணுவம் ஆட்சியை பிடித்தது. இதற்கு எதிராக போராட்டம் நடத்தும் மக்களை ராணுவம் ஒடுக்கி வருகின்றது. இரு தினங்களுக்கு முன் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 100 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், மியான்மர் ராணுவம் நடத்திய வந்த 5 யூடியூப் சேனல்களை யூடியூப் நிர்வாகம் ேநற்று அதிரடியாக முடக்கியது. ராணுவத்துக்கு சொந்தமான மியாவாடி மீடியா, எம்ஆர்டிவி, டபிள்யூ ஆன்லைன் ஒளிபரப்பு, எம்டபிள்யூ வெரைட்டி, எம்டபிள்யூடி மியான்மர் ஆகிய 5 சேனல்களையும் முடக்கி உள்ள யூடியூப் நிர்வாகம், அவற்றில் இருந்த ஏராளமான வீடியோக்களையும் நீக்கியுள்ளது.

யூடியூப் நிர்வாகம் ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யூடியூப்பின் வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், மியான்மர் ராணுவம் பயன்படுத்திய 5 சேனல்கள் முடக்கப்பட்டு, அவற்றில் இருந்த  வீடியோக்களும் அகற்றப்பட்டுள்ளன. யூடியூப் கொள்கைக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் பேச்சு, துன்புறுத்தல், வன்முறை, நிர்வாகத்தின் கொள்கைக்கு எதிரான வரைபடங்கள் என கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: