ஆளுநரை தாக்க முயன்ற விவகாரம் 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: இமாச்சல சபாநாயகர் அறிவிப்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேச பட்ஜெட் கூட்டத் தொடர் சில தினங்களுக்கு முன் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் சட்டப்பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக வந்த ஆளுநர் பண்டாரு தத்தரேயாவை காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் தடுத்தனர். அவர் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, காங்கிரசை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் முகேஷ் அக்னி கோத்ரிஉள்ளிட்ட  5 எம்எல்ஏக்கள் கடந்த 26ம் தேதி கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யும்படி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில், இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நேற்று இந்த 5 பேரின் சஸ்பெண்ட் நடவடிக்கையையும் சபாநாயகர் விபின் பார்மர் ரத்து செய்தார்.

Related Stories: