×

சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து அதிஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்

திருப்போரூர்: மதுராந்தகம் அருகே படாளத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான ஒரு டிப்பர் லாரி திருப்போரூர்நோக்கி நேற்று காலை புறப்பட்டது. லாரியை கடலூரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் ஒட்டினார். செம்பாக்கம் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக வாகனத்தை வேகமாக திருப்பியபோது, நிலை தடுமாறிய லாரி சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பில் (சென்டர்மீடியன்) மோதி நொறுங்கியது. இதில் லாரின் முன்பக்கம் சேதமடைந்து துண்டாக உடைந்தது. டிரைவர் மணிகண்டன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய லாரியை மீட்டனர். மேலும், காயமடைந்த டிரைவரை, மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Truck collides with roadblock Fortunately the driver survived
× RELATED ராமேஸ்வரத்தில் அபாயமாக இயங்கும் அரசு...