வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஆலோசனை

திருப்போரூர்: திருப்போரூர் சட்மன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஆலோசனை  கூட்டம் நடந்தது. திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் பணியாளர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன், திருப்போரூர் வட்டாட்சியர் ரஞ்சனி, துணை வட்டாட்சியர் ஜீவிதா ஆகியோர் வாக்குப்பதிவு நாளிலும், வாக்கு எண்ணிக்கை நாளன்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்து ஆலோசனை வழங்கினர். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

Related Stories:

>