ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன விபத்து தாய், மகள் உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் பலியானார்கள். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த காந்தூர் ஊராட்சி, பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கண்ணகி (35). இவர்களது மகள் ஜனனி (14). நேற்று மதியம் கண்ணகி, சுங்குவார்சத்திரம் பஜார் வீதிக்கு மகளுடன் புறப்பட்டார். இதையொட்டி, ஆட்டோவில் பயணம் செய்தனர். சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி என்ற பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்திசையில் பயணிகள் ஏற்றி வந்த மற்றொரு ஆட்டோ, இந்த ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் கண்ணகி, ஜனனி உட்பட 6 பேர் டுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சுங்குவார் சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 6 பேரை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கண்ணகி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதற்கிடையில் மேல் சிகிச்சைக்காக ஜனனியை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். படுகாயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிக்னறனர். ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்தாய், மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, வேளச்சேரி நியூ காலனியை சேர்ந்தவர் பத்ரிநாத் (48). இவரது சகோதரர் நிர்மல் (34). இருவரும் நேற்று முன்தினம் வேலூரில் உள்ள உறவினர் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். சடங்கு முடிந்து 2 பேரும் நேற்று பைக்கில் வேளச்சேரிக்கு புறப்பட்டனர். நிர்மல், பைக்கை ஓட்டினார். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஸ்ரீபெரும்புதூர் அருகே பீமன்தாங்கல் பகுதியில் வந்தபோது, திடீரென ஒருவர் சாலையை கடந்தார். இதை கண்டதும், சடர்ன் பிரேக் பிடித்தனர். திடீரென பைபைக் பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறி 2 பேரும் சாலையில் விழுந்து, படுகாயமடைந்தனர். தகவலறிந்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்ரிநாத் இறந்தார். நிர்மலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>