உறவினருக்கு சாதகமான செயல்பாடு செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிபதி அதிரடி சஸ்பெண்ட்: ஐகோர்ட் நடவடிக்கை

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ராமநாதன். இவர் தனது  நெருங்கிய உறவினர் ஒருவருக்கு சாதகமாக தனது நீதிபதி  அதிகாரத்தை பயன்படுத்தியதாக உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், ராமநாதனை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற பதிவாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்பு நீதிபதி விசாரணைக்கு பின்னர் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த 3 ஆண்டுகளாக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக பணியாற்றி வந்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>