காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு

காஞ்சிபுரம்:  ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. மாவட்ட பிரிவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 10 ஆண்டுகளில், 4.33 லட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த 4 தொகுதிகளில் ஆலந்தூர் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக உள்ளது. அங்கு, 3.89 லட்சம் பேர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்களில், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர்.

பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிப்போரில், அதிகபட்சமாக முதல் வாக்காளர்களாக, 19 வயது உடையவராக இருப்பர். சிலர் மட்டுமே, தொகுதி மாறி குடியேறுவதால், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய கட்டாயம் வரும்.

அந்த வகையில், ஒவ்வொரு தொகுதியிலும், 10 ஆண்டுகளில், கணிசமான அளவில், வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். கடந்த, 2011 சட்டமன்ற தேர்தலைவிட, 2021ல் நடைபெறும் இந்த தேர்தலில், 4 சட்டமன்ற தொகுதிகளில், 4 லட்சத்து 33 ஆயிரத்து, 557 வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக, ஆலந்தூரில் 1.5 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Related Stories:

>