தொழிலாளர்கள் போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த வல்லூர் அனல் மின் நிலையத்தில் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை எந்த தொழிலாளியையும் பணி நிரந்தரம் செய்யவில்லை. ேமலும், அபாயகரமான பணிகளில் ஈடுபடும் இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாது என விதிகள் இருந்தும் எந்த சட்ட திட்டங்களையும் அரசு நிறுவனங்களே மதிப்பதில்லை. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>