×

கஞ்சா கடத்திய 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ் உத்தரவின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர அரசு பேருந்தை  மடக்கி சோதனை செய்தனர். அதில் 2 பயணிகளின் 3 பைகளில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.


இது தொடர்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த அங்காடி ரெட்டி சிவா(50), ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த சையது அபு பக்கீர்(28) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், நெல்லூரிலிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்த வந்ததாக கூறினர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.Tags : 2 arrested for smuggling cannabis
× RELATED சிக்கன் கடை உரிமையாளரை கத்தியால்...