×

மீண்டும் குஜராத்தில் பறவைக்காய்ச்சல் பீதி: கறிக்கோழி, முட்டை விற்பனைக்கு தடை: மகாராஷ்டிராவிலும் எச்சரிக்கை அறிவிப்பு

அகமதாபாத்: கொரோனா தொற்று பரவல் பீதிக்கு மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வடமாநிலங்களில்க பறவை காய்ச்சல் பரவல் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மீண்டும் பறவை காய்ச்சல் பீதி குஜராத்தில் பரவி வருகிறது. ​​அகமதாபாத்தின் சோலா பகுதியில் கோழிகள் திடீரென இறந்ததால் பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சோலா பகுதியை சுற்றியுள்ள 10 கி.மீ சுற்றளவிற்கு கறிக்கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முட்டை மற்றும் கறிக்கோழி இருப்பு உணவுப் பொருட்களை அழிக்கவும் அகமதாபாத் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தின் நிலவரம் இப்படி இருக்க, பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நேற்று எட்டு காகங்கள் இறந்து கிடந்தன. அதனால், அங்கும் பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இறந்த காகங்களின் மாதிரிகள் ேசகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் மகாராஷ்டிராவில் கடந்த 3ம் தேதி 79 பறவைகள் (75 ேகாழி, 4 காகம்) மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அம்மாநில அரசு ெதரிவித்துள்ளது. அதயைடுத்து இறந்த பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் மற்றும் நோய் விசாரணை பிரிவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுெதாடர்பாக மகாராஷ்டிரா கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட கோழி பண்ணைகளிலிருந்து 1 கி.மீ சுற்றளவில் அனைத்து கோழிகள், முட்டை, கோழி தீவனம் மற்றும் நீர்த்துளிகள் அழிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மண்டலத்திலிருந்து இதுவரை 10,65,847 கோழி பறவைகள், 60,75,791 முட்டைகள், 83,694 கிலோ கோழி தீவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தனர். வடமாநிலங்களில் மீண்டும் பறவைக்காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.


Tags : Gujarat ,Maharashtra , Bird flu scare in Gujarat again: Ban on sale of broilers, eggs: Warning issued in Maharashtra too
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்