×

இங்கிலாந்து இளவரசர், இளவரசி பதவி விலகிய விவகாரம் ஓராண்டுக்கு பின் ‘அரண்மனை’ ரகசியங்கள் அம்பலம்: ஹாரி - மேகன் மார்கல் தம்பதி வெளியேற்றப்பட்டனரா?

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் மார்கல் பதவி விலகி ஓராண்டுக்கு பின் ‘பக்கிங்ஹாம் அரண்மனை’ ரகசியங்கள் அம்பலமாகி உள்ளது. இதனால் பக்கிங்ஹாம் அரண்மனை சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து இளவரசர் ஹாரி (39) மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் (36) தம்பதியர் இங்கிலாந்து அரச குடும்பப் பதவிகளிலிருந்து விலகுவதாக கடந்தாண்டு அறிவித்தனர். இவர்களின் முடிவுக்கு ராணி எலிசபெத் ஒப்புதல் வழங்கினார். அப்போது பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பில், ‘இங்கிலாந்து இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்கல் ஆகிேயார் இனிமேல் இளவரசர், இளவரசி பட்டங்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மக்களின் வரிப் பணத்தையும் பெறமாட்டார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் அரச குடும்பத்தில் இருந்து விலகியது குறித்து இங்கிலாந்து பத்திரிகைகள் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. இதற்கு ஹாரியும் - மேகன் மார்கலும் எவ்வித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்து வந்தனர். தொடர்ந்து கனடா மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தனர். இந்நிலையில் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் மனம் திறந்து பேட்டியளித்துள்ளனர். ‘நீங்கள் உண்மையைப் பேசுவதை இங்கிலாந்து அரண்மனை எவ்வாறு எடுத்துக் கொள்ளும்? என்று ஓப்ராமேகன், மேகனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு மேகன் பதிலளிக்கும்போது, ‘எங்களைப் பற்றி பொய்களை பரப்பிவிட்டு, நாங்கள் இன்னமும் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார். இவரது அதிரடி பதில், பாரம்பரிய பக்கிங்ஹாம் அரண்மனை மீது சர்வதேச அளவில் பார்வையை திருப்பியுள்ளது.

இதற்கிடையே ஹாரி - மேகன் தம்பதி பக்கிங்ஹாம் அரண்மனையில் வசித்த போது அவர்களுக்கு உதவியாக இருந்த இரண்டு தனிப்பட்ட உதவியாளர்களை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், மற்றொருவரை அவமதிப்பு செய்ததாகவும் அரண்மனையில் பணியாற்றும் ஊழியர் மூலம் ‘டைம்ஸ்’ பத்திரிகைக்கு இமெயில் வந்தது. அந்த இமெயில் அடிப்படையில் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இதனால் ெபரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘அரண்மனை ஊழியர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த விபரங்களை ‘டைம்ஸ்’ பத்திரிகை மூலம் வெளியிட்டதை பார்த்து கவலை அடைந்துள்ளோம். மனிதவள மேம்பாட்டுக் குழு பத்திரிகை செய்தியில் வந்த கட்டுரையின் அடிப்படையில் விசாரணை நடத்தும். பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அரண்மனையை விட்டு வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் ஆகியோரிடம் விசாரிக்கப்படும். அரண்மனையின் கண்ணியத்தை காப்பாற்ற பணியிடத்தில் நடக்கும் கொடுமை அல்லது துன்புறுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறப்பட்டுள்ளது.

அரண்மனையின் அறிவிப்பை தொடர்ந்து அதிகாரிகள் குழு விசாரணையை தற்போது ெதாடங்கியுள்ளனர். அரண்மனையை விட்டு வெளியேறிய தம்பதியினர் தற்போது கலிேபார்னியாவில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், மேகன் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓராண்டுக்கு பின் அரண்மனை ரகசியங்கள் தற்போது வெளியாகி உள்ளதால், ஹாரி - மேகன் தம்பதி பல்ேவறு நெருக்கடியால் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட்டனரா? அல்லது அவர்களின் விருப்பத்தின் பேரில் அத்தனை சுகத்தையும் விட்டுவிட்டு வெளியேறினரா? என்பது கேள்வியாக உள்ளது.

Tags : Prince of England ,Princess ,Harry ,Megan Markle , 'Palace' secrets exposed a year after the resignation of the Prince and Princess of England: Harry - Megan Markle couple expelled?
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்