×

தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.!!!

சென்னை: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை தொடங்கியது. இன்று சென்னை அண்ணா அறிவாலாயத்தில் திமுக-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் தற்போது வரை கூட்டணி கட்சிகளுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu Assembly Election ,Communist Party of India ,DMK ,MK Stalin , Tamil Nadu Assembly Election: Allotment of 6 constituencies to the Communist Party of India in the DMK alliance: Signature in the presence of MK Stalin. !!!
× RELATED பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள...