பென் ஸ்டோக்சுடன் வாக்குவாதம் ஏன்?: முகமது சிராஜ் விளக்கம்

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்து வரும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் பென்ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்தபோது இந்தியாவின் முகமது சிராஜ் பவுன்சர்களை வீசினார். பவுன்சராக வீசியபோது, அதைச் சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், முகமது சிராஜை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, முகமது சிராஜ் நேரடியாக கேப்டன் கோஹ்லியிடம் சென்று ஸ்டோக்ஸ் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட கேப்டன் ஸ்டோக்ஸிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் சூடானதையடுத்து, நடுவர் நிதின் மேனன் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து முகமது சிராஜ் போட்டி முடிந்தபின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ நான் 13வது ஓவரை வீசினேன். ஸ்டோக்ஸ் எதிர்கொண்டார். பவுன்சராக வீசியதைத் தாங்க முடியாத ஸ்டோக்ஸ் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினார். இதையடுத்து, நான் கேப்டன்சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அவர் உடனடியாக ஸ்டோக்ஸிடம் சென்று எனக்காகப் பேசினார். வாக்குவாதம் நடந்தது உண்மைதான் , ஆனால், அந்த சம்பவத்தை விராட்கோஹ்லி அருமையாகக் கையாண்டார். இதுதான் களத்தில் நடந்தது” எனத் தெரிவித்தார்.

கோஹ்லிக்கு கவாஸ்கர் ஆதரவு

ஆஸ்திரேலியப் பயணத்தின்போது, சிட்னியில் நடந்த போட்டியில் ரசிகர்கள் ஜஸ்பிரித் பும்ராவையும், முகமது சிராஜையும் இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளில் பேசினர். இது தொடர்பாகா சிராஜ், ரகானே அளித்த புகாரை விசாரித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், அவ்வாறு நடந்தது உண்மைதான் என விசாரணையில் கண்டறிந்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டு வர்ணணையின் போது பேசிய தனது வீரர்களுக்கு ஒன்று என்றால் முன்னால் வந்து நிற்கும் ஒரு கேப்டனைத்தான் நாம் சிட்னியில் மிஸ் செய்வோம், என்றார்.

Related Stories: