ரோட்டர்டாம் டென்னிஸ் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி

ரோட்டர்டாம்: அமெரிக்காவில் நடந்து வரும் ரோட்டர்டாம் டென்னிஸ் போட்டியில் குரோஷிய வீரர் போர்னா கோரிக் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் இவர், செர்பியாவின் டுசான் லாஜோவிச்சுடன் மோதினார். முதல் சுற்றில் லாஜோவிச், ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவை வீழ்த்தினார். இதனால் ரசிகர்களுக்கு இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.கடந்த 2018 நவம்பரில் போர்னா கோரிக், ஆடவர் தரவரிசையில் 12ம் இடத்தை பிடித்தார். தற்போது அவர் தரவரிசையில் 24ம் இடத்தில் உள்ளார். கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். அதன் பின்னர் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் கோரிக், காலிறுதி வரை முன்னேறினார். தொடர்ந்து அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நேற்றைய போட்டியிலும் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3, 6-2 என நேர் செட்களில் லாஜோவிச்சை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியுடன் மோதவுள்ளார்.இப்போட்டி குறித்து போர்னா கோரிக் கூறுகையில், ‘‘கடந்த ஓராண்டில் நான் சிறப்பாக விளையாடிய போட்டி இதுதான் என்று உணர்கிறேன். முதல் செட்டில் 3-3 என்ற சமநிலையில் இருந்த போது, எளிதான வெற்றி கிட்டும் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை.

ஆனால் தொடர்ந்து 3 கேம்களை எடுத்து  அந்த செட்டை 6-3 என கைப்பற்றியதும், எனது நம்பிக்கை அதிகரித்தது.காலிறுதியில் நிஷிகோரியுடன் மோதுகிறேன். 5 ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோவில் ஒருமுறை அவரை எதிர்த்து ஆடினேன். அதில் தோல்வியடைந்தேன். அதனால் கூடுதலாக பயிற்சி எடுத்துக் கொண்டு, இம்முறை அவருடன் மோதவுள்ளேன்’’ என்று தெரிவித்தார்.

Related Stories: